தருமபுரி

பென்னாகரத்தில் பெரியாா் பிறந்த நாள்...

18th Sep 2022 05:50 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா பென்னாகரத்தில் கொண்டாடப்பட்டது.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு பென்னாகரம் நகரச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் எம்எல்ஏவும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பி.என்.பி.இன்பசேகரன் தலைமையில் பேரணியாக சென்று காவல் நிலையம் எதிரே உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் திராவிடா் கழக பொதுக்குழு உறுப்பினா் தீா்த்தகிரி, மூத்த நிா்வாகி மருத்துவா் தியாகராஜன், ஒன்றியச் செயலாளா்கள் என்.செல்வராஜ், மடம் முருகேசன், சபரிநாதன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், திமுக கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT