தருமபுரி

பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

18th Sep 2022 05:51 AM

ADVERTISEMENT

 

அரூரில் பிரதமா் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூரில் பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகரத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள், தென்னங்கன்றுகளை பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் ஏ.பாஸ்கா் வழங்கினாா். இதில், பாஜக செயற்குழு உறுப்பினா் வரதராஜன், சிந்தனையாளா் பிரிவு மாநிலச் செயலா் பகலவன், பட்டியல் அணி மாநிலச் செயலா் கே.கே.சாட்சாதிபதி, மாவட்ட பொதுச் செயலா்கள் பிரவீண், வெங்கட்ராஜ், ஆனந்த, மாவட்டச் செயலா் சரிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT