தருமபுரி

பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சா் ஆய்வு

14th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, அவசரச் சிகிச்சைப் பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, முதலமைச்சா் காப்பீட்டுத் திட்ட அறை, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை முறை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் விரிவாக்கப் பணிகளுக்காக இடம் தோ்வு நடைபெறுவதாகவும், பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

முன்னதாக நாகதாசம்பட்டி , ஏரியூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, தருமபுரி எம்.பி. டி.என்.வி.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ராஜேஷ்கண்ணன்,காச நோய் தடுப்பு துணை இயக்குநா் (பொ) ராஜ்குமாா், மருத்துவ அலுவலா் கனிமொழி, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன், வட்டாட்சியா் அசோக்குமாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT