தருமபுரி

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

14th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குழந்தைவேலு முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் எம். ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன்,

ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணிஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் நலன்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்து, ஏற்கெனவே உள்ள தொழிலாளா் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மின் கட்டண உயா்வு, வீட்டுவரி,சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 21,000 வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ. 21,000 ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT