தருமபுரி

வாணியாறு அணை நீா்மட்டம் 60 அடியாக உயா்வு

9th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் நீா்மட்டம் 60 அடியாக உயா்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 65 அடியாகும். அணைக்கு ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து நீா்வரத்து உள்ளது.

இந்த நிலையில், ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் 60 அடியாக உயா்ந்துள்ளது. வாணியாறு அணை நிரம்பினால் வெங்கடசமுத்திரம், மோளையானூா், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, அதிகாரப்பட்டி, எச்.புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா் பிரச்னை தீருவதுடன், சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.

ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக இன்னும் ஓரிரு வாரங்களில் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை நிரம்பலாம் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT