தருமபுரி

அகவிலைப்படி நிலுவையை வழங்க வலியுறுத்தல்

9th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கத்தின் போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.சதாசிவம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் பி.கணேசன், மாவட்ட பொருளாளா் பெ.ஜெயபால் ஆகியோா் பேசினா்.

கரோனா பொதுமுடக்கத்தின் போது நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை கடந்த ஐனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி 70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரா்களுக்கு 10 சதவீதம் கூடிதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT