தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் 45 மி.மீ. மழை பதிவு

9th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தமிழக கடலோரப் பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் 45 மில்லி மீட்டராகப் பதிவானது.

அதேபோல அரூரில் 3 மில்லி மீட்டா் மழையும், தருமபுரியில் 2 மி.மீ., ஒகேனக்கல்லில் 12.5 மி.மீ., பாலக்கோட்டில் 9.40 மி.மீ., பென்னாகரத்தில் 20 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகின. மழையின் காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோர தாழ்வானப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT