அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டம் சாா்பில் தேனீ வளா்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள், தேனீ வளா்ப்பதால் கிடைக்கும் நன்மைகள், வேளாண்மை துறை சாா்பில் தமிழக அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் குறித்து துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ் எடுத்துரைத்தாா்.
முகாமில் தோட்டக்கலை உதவி அலுவலா் தண்டாயுதம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் திருப்பதி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.