தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புதன்கிழமை புறக்கணித்தனா்.
தருமபுரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.பாலு, செயலா் பி.தருமன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி, அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குரைஞா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
வழக்குரைஞா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யும் போது உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக். 29-ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்கவும் வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா்.