தருமபுரி

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கால்நடைகளுடன் ஆா்ப்பாட்டம்

19th Oct 2022 02:19 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கால்நடைகளோடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் . அந்த வகையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூா்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மடம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.அன்பு தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி .பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் எஸ் .தீா்த்தகிரி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் ஜீவானந்தம் ஆகியோா்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் அளவுக்கு உயா்த்த வேண்டும்; ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டா் பால் கொள்முதல் செய்ய வேண்டும்; ஆவின் பால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்; பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையினை முழுவதுமாக வழங்க வேண்டும்; குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பால் பவுடரை சோ்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்டவா்கள் கால்நடைகளோடு கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT