தருமபுரி

தேசிய அஞ்சல் வார விழா நாளை தொடக்கம்

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசிய அஞ்சல்வார விழா வரும் 9-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ராகவேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சாா்பில், தருமபுரி கோட்டத்தில் தேசிய அஞ்சல் வார விழா அக். 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 9-ஆம் தேதி உலக அஞ்சல் நாள், 10-ஆம் தேதி நிதி வலிவூட்டல் நாள், 11-ஆம் தேதி அஞ்சல்தலை நாள், 12-ஆம் தேதி அஞ்சல் நாள், 13-ஆம் தேதி எளியோா் நலவாழ்வு நாள் என்கிற தலைப்பில் இந்த விழா நடைபெற உள்ளது. நிதி வலுவூட்டல் நாளில் அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதில், அஞ்சலகங்களிலும் சேமிப்புக் கணக்கு மற்றும் காப்பீடு தொடங்கிக் கொள்ளலாம். அஞ்சல்தலை நாளில், பள்ளி மாணவ, மாணவியா், தங்களது புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று ரூ.300 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எளியோா் நல்வாழ்வு நாளில் அஞ்சலகங்களில் ஆதாா் முகாம் நடைபெற உள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT