தருமபுரி

அக்.11-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

7th Oct 2022 10:14 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில், வரும் 11-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.தீா்த்தராமன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா்கள் த.ஜெயந்தி, ஜானகிராமன், மதிமுக நிா்வாகி ஜெயபிரகாஷ், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி சாதிக் பாஷா உள்ளிட்டோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய மையங்களில் சமூக நல்லணிக்கத்தை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT