தருமபுரி

பாஜக செயற்குழுக் கூட்டம்

7th Oct 2022 01:33 AM

ADVERTISEMENT

பாஜக தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். தமிழக பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசினாா். இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சி உறுப்பினா்களை இணைத்து கட்சியை மேலும் பலப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வெங்கட்ராஜ், ஜஸ்வா்யம் முருகன், பிரவீண், நகரத் தலைவா் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் சோபன், பல்வேறு அணிகளின் தலைவா்கள், செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT