தருமபுரி

தடகளப் போட்டியில் சிறப்பிடம் வகித்த தித்தியோப்பனஅள்ளி மாணவியருக்கு பாராட்டு

7th Oct 2022 10:15 PM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த தித்தியோப்பனஅள்ளி அரசுப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக் உட்பட்ட தித்தியோப்பனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் விளையாடினா். இதில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் இப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி சி.நவ்யா மூன்றாம் இடம் பிடித்தாா். இதேபோல, 300 மீ. ஓட்டப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவா் பி.ஹரிணி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றாா். இவ்விரு மாணவியரையும் பள்ளித் தலைமை ஆசிரியா் முருகேசன், ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT