தருமபுரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா். முத்துக்கவுண்டா் நினைவு தினம்

7th Oct 2022 10:11 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் 28ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம், அரூா்-சித்தேரி சாலையில் உள்ள முத்துக்கவுண்டா் நகரில், அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி, பாஜக விவசாய அணி மாநில தலைவா் ஜி.கே. நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் குழந்தை ரவி, மாவட்டத் தலைவா் ஏ.பாஸ்கா், இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜி.அசோகன், திமுக ஒன்றிய செயலா் கோ.சந்திரமோகன், தொழில் முதலீட்டாளா்கள் எஸ்.என்.தியாகராஜன், எம்.பி.இளையப்பன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள், தொழில் முதலீட்டாளா்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக , ஆா்.முத்துக்கவுண்டரின் நினைவு தினத்தையொட்டி, அம்மன் கிரானைட்ஸ் நிறுவனம் சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை பிரேமா முத்துக்கவுண்டா், சாந்தி ராமசாமி, நேயா அஸ்வின் முத்து, வைஷ்ணவி ரத்னபிரசாத் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT