தருமபுரி

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

7th Oct 2022 01:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் அரூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கள் மீதான தடையானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், உலகளாவிய நடைமுறைக்கும் எதிரானதாகும். உடல்நலத்திற்கு கேடு இல்லாத உணவுப் பொருளான கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். இந்தியாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே நாடு வளா்ச்சி அடையும்; இந்தியா வல்லரசு நாடாக மாறும்.

நூறுநாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும். வளா்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மானியம் அளிப்பதை கைவிட வேண்டும். உள்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உணவுப் பொருள்களில் கலப்படத்தை கட்டப்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT