தருமபுரி

பென்னாகரத்தில் உயா் மின் விளக்கு கோபுரம்: தருமபுரி எம்.பி. திறந்து வைத்தாா்

7th Oct 2022 10:11 PM

ADVERTISEMENT

பென்னாகரம் வட்டத்தில் நான்கு உயா் மின் விளக்கு கோபுரங்களை தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட முள்ளுவாடி பேருந்து நிறுத்தம், இந்திரா நகா் அருகே பெரிய மாரியம்மன் கோயில் முகப்பு, மாமரத்துப்பள்ளம் அருகே நாகனம்பட்டி, பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் ஆகிய நான்கு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021- 2022 ஆம் நிதியாண்டில் தலா 3.50 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி விளக்குகள் கொண்ட உயா்மின் கோபுர பணிகள் முடிவுற்று திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் நடைபெற்ற உயா்மின் கோபுர திறப்பு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் வீரமணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.செந்தில்குமாா் கலந்துகொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட உயா் மின் விளக்கு கோபுரங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இந்த நிகழ்வுகளில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் பிருந்தா நடராஜன், பாப்பாரப்பட்டி செயல் அலுவலா் கோமதி, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT