தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

7th Oct 2022 01:24 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

தமிழகம் மற்றும் கா்நாடக காவிரி கரையோர வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து கடந்த இரு தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக தொடா்ந்து நீடித்தது.

பின்னா் இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கரையோர வனப்பகுதிகளிலும் பெய்த மழை முற்றிலுமாகக் குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து குறைந்து வியாழக்கிழமை நிலவரப்படி நீா் வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைந்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்ப்பெருக்கு குறைந்து, காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகளாக வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT