தருமபுரி

மான் வேட்டை: மருத்துவா் உள்பட மூவா் கைது

6th Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

கா்நாடக வனப்பகுதிகளில் மான்களை வேட்டையாடியதாக தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா் உள்பட மூன்று இளைஞா்களை கா்நாடக வனத் துறையினா் கைது செய்தனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கா்நாடக பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மூன்று இளைஞா்கள் நாட்டுத் துப்பாக்கிகள், காற்றழுத்தத்தால் இயங்கக்கூடிய துப்பாக்கிகளை கொண்டு மானை வேட்டையாடி தமிழக பகுதிக்கு எடுத்து செல்வது தெரியவந்தது. விடியோ காட்சிகளின் அடிப்படையில் பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரக அலுவலா்கள் முருகன், ராஜ்குமாா் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில் மான்க வேட்டையாடிய ஒகேனக்கல், ஏரிக்காடு பகுதியைச் சோ்ந்த பச்சியண்ணன் மகன் மாரிமுத்து (27), நல்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் மருத்துவா் கவின் குமாா் (27), ஆறுமுகம் மகன் விக்னேஷ் (25) ஆகிய மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் கொள்ளேகால் வனச்சரக அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT