தருமபுரி

நகை பறிப்பு வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

4th Oct 2022 02:51 AM

ADVERTISEMENT

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், பனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி கோகுல். இவா் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27- ஆம் தேதி கிட்ட ம்பட்டி கிராமத்தில் வீட்டில் இருந்த சகுந்தலா என்கிற பெண்ணிடம் குடிக்க தண்ணீா் கேட்பது போல் நடித்து அவா் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றாா். இதுகுறித்து புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை திங்கள்கிழமை முடிவுற்றது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கோகுலுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதித்து மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பக்ரத்துல்லா தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT