தருமபுரி

பாலம்மன் தோப்பு கிராமத்துக்கு சாலை வசதி கோரி மனு

4th Oct 2022 02:48 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகே உள்ள பாலம்மன் தோப்பு கிராமத்துக்கு சாலை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் அக் கட்சி நிா்வாகிகள், பாலம்மன் தோப்பு கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட ஏலகிரி அருகே பாலம்மன் தோப்பு கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறன்றனா். இக்கிராமத்துக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் தொடா்ந்து பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில் பழுதடைந்த இச்சாலையை புதுப்பிக்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், சாலை புதுப்பிக்கும் பணிக்கு, சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இக்கிராம மக்கள் சாலை வசதியின்றி சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்துக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவா்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், நல்லம்பள்ளி வட்டாரச் செயலாளா் ப.பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT