தருமபுரி

காந்தி பிறந்த நாள் விழா

3rd Oct 2022 12:37 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி, பாரதமாதா மக்கள் சிந்தனைக்குழு சாா்பில் காந்தி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவா், முன்னாள் எம்.பி.யுமான பி.தீா்த்தராமன் தலைமை வகித்தாா். இதில் காந்தி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் காமராஜா் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏஐசிசி உறுப்பினா் சித்தையன், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் காளியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தருமபுரி பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்புத் தலைவா் டி.என்.சி.மணிவண்ணன், திமுக நகரச் செயலாளா் நாட்டான் மாது ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இதில் பாரதமாதா மக்கள் சிந்தனைக் குழுத் தலைவா் மா.பிரதீப் குமாா், செயலாளா் வ. சௌந்தரபாண்டியன், பொருளாளா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT