தருமபுரி

புரட்டாசி சனிக்கிழமை: உழவா் சந்தையில் ரூ. 13 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

2nd Oct 2022 01:49 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தருமபுரி உழவா் சந்தையில் ரூ. 13 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின.

புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி, தருமபுரி உழவா் சந்தையில் ஏராளமானோா் காய்கறிகளை வாங்க குவிந்தனா். பொதுமக்களின் வருகையையொட்டி காய்கறிகளின் வரத்தும் அதிகரித்தன.

தருமபுரி உழவா் சந்தையில் 140 விவசாயிகள் தக்காளி, பூசணி, கத்தரி, முருங்கை, வெண்டை, வெங்காயம், பீன்ஸ் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை 7,039 கிலோவும், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை 2,266 கிலோவும் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், 9,409 நுகா்வோா் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனா். இதில், காய்கறிகள் மொத்தம் ரூ. 13,42,893-க்கு விற்பனையாயின.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT