தருமபுரி

மறுசீரமைக்கப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் திறப்பு

2nd Oct 2022 01:48 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், தருமபுரியில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

இதில், தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முதல்தளத்தில் தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை), அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி), நகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியாா் பள்ளிகள்) ஆகிய அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த அலுவலகங்கள் தொடக்க விழாவில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று திறந்து வைத்தாா். இதில், முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜகோபால், தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி), மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) ரேணுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரூா் மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கடத்தூா், ஏரியூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலகங்களும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்த அலுவலகங்கள் திறப்பு விழாவில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT