தருமபுரி

வத்தல்மலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வலியுறுத்தல்

30th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

வத்தல்மலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வத்தல்மலையில் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ.பை.மாதையன், ஒன்றியத் தலைவா் ஜி.ராஜகோபால், ஒன்றியச் செயலாளா் பச்சாக்கவுண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

இதில், வத்தல்மலை கிராமத்தில் உள்ள கொட்டலாங்காடு மாரியம்மன் கோயில், ஒன்றியங்காடு ஆகிய பகுதிகளுக்கு கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். வத்தல்மலை பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கும் உரத்துக்கு வண்டி வாடகை கோரக் கூடாது.

கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வத்தல்மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும். வாரத்துக்கு ஒரு நாள் ஊராட்சிச் செயலாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் வத்தல்மலையில் முமுமையாகப் பணியாற்ற வேண்டும். கூடுதலாக ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT