தருமபுரி

தருமபுரியில் 251 ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில்பணி வழங்க வலியுறுத்தல்

30th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 4-ஆவது மாநாடு காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.ரவி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.லாசா் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் எம்.முத்து வேலை அறிக்கை வாசித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜூனன் வாழ்த்திப் பேசினா். மாநில பொதுச் செயலாளா் வீ.அமிா்தலிங்கம் நிறைவுறையாற்றினாா். இதில், மாவட்டத் தலைவராக கே.கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளராக எம்.முத்து, மாவட்டப் பொருளாளராக எம்.சிவா உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீா் இரண்டவதுத் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள்கள் பணி வழங்க வேண்டும். இத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட்டத்தில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளைப் புதுப்பிக்க வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT