தருமபுரி

ஸ்டான்லி மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

ஜுராசிக் பாா்க், செயற்கைக்கோள் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளின் மாதிரிகளை தயாரித்து பள்ளி மாணவ, மாணவியா் கண்காட்சியில் வைத்திருந்தனா். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்திருந்த மாணவ, மாணவியருக்கு திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பேராசிரியா் இ.மணிகண்டன் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த அறிவியல் கண்காட்சியை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டனா்.

இந்த விழாவில், ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.முருகேசன், செயலாளா் மு.பிருஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT