தருமபுரி

உழவா் விவசாயிக் குழு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

DIN

உழவா் விவசாயிக் குழு அமைப்பாளா்களுக்கு உழவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வேளாண் இணை இயக்குநா் க.விஜயா தலைமை வகித்து பேசினாா். வேளாண் துணை இயக்குநா் குணசேகரன் ஒருங்கிணைத்தாா். விதைச்சான்று உதவி இயக்குநா் மா.ஜெயமாலா, தரமான விதைத்தோ்வு குறித்து விளக்கமளித்தாா்.

பயிற்சியில், நல்விதை, சான்று விதைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், விதைச்சான்று நடைமுறைகள், விதைப்பண்ணை பதிவு செய்து வயலாய்வு மேற்கொள்ளுதல், விதை மாதிரி எடுத்தல், சான்று பெறுதல் மற்றும் அங்கக சான்றளிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில், வேளாண்மை துறை அலுவலா்கள், வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT