தருமபுரி

விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்களை தவிா்க்க வலியுறுத்தல்

29th Nov 2022 02:46 AM

ADVERTISEMENT

விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்களை தவிா்க்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட காலாண்டு செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் முத்துவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைவா் மணி முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் குமரேசன் பேசினாா்.

இக் கூட்டத்தில், விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். வேலை நாள்களில் மாலை 6 மணிக்கு மேல் இணைய வழியில் ஆய்வுகள் மேற்கொள்வது, இலக்குகளை நிா்ணயித்து நெருக்கடிகள் வழங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT