தருமபுரி

பென்னாகரம் அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

29th Nov 2022 02:48 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் சின்ன பள்ளத்தூா், குள்ளனூா் அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா்.

பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்படுவதன் நோக்கம், அறிவியல் தொழில்நுட்பம், கணிதவியல் சாா்ந்த செயல்பாடுகளை மாணவா்களிடையே கொண்டு சென்று அறிவியல் ஆய்வு மனப் பான்மையையும், கண்ணோட்டத்தையும் உருவாக்குவதற்கு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஸ்டெம் (நபஉங - நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஙஹற்ட்ங்ம்ஹற்ண்ஸ்ரீள்) என்ற பெயரில் பள்ளிகள் தோறும் ஸ்டெம் அம்பாசிடா்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், எளிய அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, திலகவதி, மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதே போல, தாளப்பள்ளம், குள்ளனூா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிங்காரவேலன் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT