தருமபுரி

தருமபுரியில் டிச. 2-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

29th Nov 2022 02:46 AM

ADVERTISEMENT

தருமபுரியில் வரும் டிச. 2-ஆம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெ.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வரும் டிச. 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில், தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக விளக்கம் அளிக்க உள்ளனா். எனவே, இக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT