தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

29th Nov 2022 02:48 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக குறைந்துள்ளது.

கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால் சனிக்கிழமை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. அதன் பின்னா் மழை குறைவினால் நீா்வரத்து சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி, வினாடிக்கு 14,000 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT