தருமபுரி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

28th Nov 2022 01:36 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் பகுதியில் திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், ஆதரவற்ற மாணவா்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

பென்னாகரம் நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். முன்னாள் பென்னாகரம் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன் கலந்துகொண்டு கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதில் தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், மாவட்ட பிரதிநிதி சிவகுமாா், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமையில் ஆதரவற்றோா் இல்ல குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ஏரியூா் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சி, காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த நடராஜன்- கலா தம்பதி இரு ஆண்டுகளுக்கு முன் கரோனா தீதுண்மி தொற்றின்போது உயிரிழந்தனா். அவா்களின் மகன்கள் ராஜேஷ், ராகேஷ் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 10,000, அத்தியாவசிய பொருள்களை திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.தா்மசெல்வன் வழங்கினாா். இவ்விரு மாணவா்களின் கல்லூரி படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாா். இதில் மாவட்ட துணை செயலாளா் உமாசங்கா், பொதுக் குழு உறுப்பினா்கள் சோலை மணி, வேலுமணி, மாவட்ட வா்த்தக அணி எல்.ஜி.குமாா், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT