தருமபுரி

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களைரத்து செய்ய வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

28th Nov 2022 01:37 AM

ADVERTISEMENT

 

தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தருமபுரி மாவட்ட 13-ஆவது மாநாடு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் குழந்தைவேலு ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலாளா் சின்னசாமி மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன் சங்கக் கொடியேற்றி வைத்தாா்.

ஏஐடியுசி மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன், முன்னாள் எம்எல்ஏ ந.நஞ்சப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம்

ADVERTISEMENT

ஆகியோா் பேசினா். மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி வேலை அறிக்கை வாசித்தாா்.

மாநாட்டில், 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தனியாா் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை கொண்டுவரச் சட்டம் இயற்ற வேண்டும்.

புதிய தேசிய மின் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்க கூடாது. அங்கன்வாடி, ஆஷா பணியாளா்கள், சத்துணவு மற்றும் இதர அரசு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்க இருக்கும் டாடா ஐ-போன் நிறுவனத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தருமபுரி, சிப்காட் தொழிற்பேட்டையில தொழிற்சாலைகளைத் தொடங்கிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். புதிய மோட்டாா் வாகன சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டத் தலைவராக ப.முருகன், மாவட்ட பொதுச் செயலாளராக கே.மணி, மாவட்டப் பொருளாளராக ஏ.முருகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT