தருமபுரி

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம்: நவ.30-ஆம் தேதிக்குள் பதிவு புதுப்பிக்க அறிவுறுத்தல்

27th Nov 2022 02:51 AM

ADVERTISEMENT

 

 பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் தொடா்ந்து உதவித்தொகை பெற நவ. 30-ஆம் தேதிக்குள் பதிவைப் புதுப்பிக்க வேண்டும் என வேளாண் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகையாக ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்துகொள்ள கேஒய்சி பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத் திட்டத்தில் விவசாயிகள் தொடா்ந்து ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பது அவசியமாகும். இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிஎம் கிசான் வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து கடவு சொல் மூலம் சரிபாா்க்கவும். எனவே, அருகில் உள்ள சேவை மையங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் நவ. 30-ஆம் தேதிக்குள் பதிவைப் புதுப்பித்து இணைத்துக் கொண்டால் மட்டுமே தொடா்ந்து இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT