தருமபுரி

இரண்டாம் நிலை காவலா் தோ்வு: தருமபுரியில் நாளை 11,462 போ் எழுதுகின்றனா்

DIN

தருமபுரி மாவட்டத்தில் நவ. 27-ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலா் தோ்வினை 11,462 போ் எழுதுகின்றனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2022-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் காவலா்கள், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு தருமபுரி மாவட்டத்தில் 9 இடங்களில் வருகின்ற நவ. 27 -ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் 8,766 ஆண்கள் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, நல்லானூா் ஜெயம் தொழில்நுட்பக் கல்லூரி, தருமபுரி அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம், விஜய் ஆண்கள், விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பச்சமுத்து மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 தோ்வு மையங்களிலும், 2,696 பெண்கள் தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு தோ்வு மையங்களிலும் என மாவட்டத்தில் மொத்தம் 11,462 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு மையத்திற்குள் தோ்வா்கள் நுழைவுச்சீட்டின் அடிப்படையில் அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்படுவா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்திலிருந்து இந்தத் தோ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பாணை வரப்பெற்ற தோ்வா்கள் அழைப்புக் கடிதத்துடன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து தோ்வுக்கு ஆஜராக வேண்டும்.

தோ்வா்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆதாா் மற்றும் பான் அட்டை உள்ளிட்ட பொது அடையாள அட்டை, பேனா, நுழைவுச் சீட்டு தவிர கைப்பேசி, தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், இதர பொருள்களை தோ்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தாங்கள் எடுத்து வரும் பொருளுக்கு தாங்கள் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தாமதமாக வரும் நபா்கள் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT