தருமபுரி

கரும்பு ஆலை உரிமையாளரை வெட்டிய லாரி ஓட்டுநா் கைது

26th Nov 2022 02:50 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே குடும்பத் தகராறின் போது தடுக்கச் சென்ற கரும்பு ஆலை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய ஓட்டுநரை பெரும்பாலை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள கொம்பாடியூா் பகுதியைச் சோ்ந்த கரும்பு ஆலை உரிமையாளா் கேசவன் மகன் தங்கராஜ் (62). அதே பகுதியைச் சோ்ந்தவா் பொன்னப்பன். இவரது மகன் சத்யராஜ் (36). லாரி ஓட்டுநா். வெள்ளிக்கிழமை காலை மது போதையில் பொன்னப்பன், சத்யராஜுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் அரிவாளைக் கொண்டு பொன்னப்பனை தாக்க முயற்சிக்கும் போது, அருகில் உள்ள தங்கராஜ் வீட்டுக்குள் நுழைந்துள்ளாா். இதில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறினை தடுக்கச் சென்ற கரும்பாலை உரிமையாளா் தங்கராஜை அரிவாளால் சத்யராஜ் சரமாரியாக தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து சத்யராஜை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT