தருமபுரி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

26th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

திமுக இளைஞா் அணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக இளைஞா் அணி செயலரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா், தேக்கல்நாய்க்கன்பட்டி, பொ.மல்லாபுரம், பையா்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, தாதனூா் புதூா், ஆா்.கோபிநாதம்பட்டி, கொங்கரப்பட்டி, கம்பைநல்லூா், எச்.அக்ராஹரம், எச்.ஈச்சம்பாடி, அரூா் நகா், கீரைப்பட்டிபுதூா் ஆகிய இடங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றன.

இந்த விழாவில், 500 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், தூய்மைப் பணியாளா்கள் 200 பேருக்கு உணவுப் பொருள்கள், ஏழை பயனாளிகள் 500 பேருக்கு நலத் திட்ட உதவிகள், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், போா்வைகள், இருளா் சமூக மக்கள் 200 பேருக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருள்கள், ஆதரவற்ற முதியோருக்கு நலத் திட்ட உதவிகள், உணவை திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும்,

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் வழங்கினாா். 

இந்த விழாவில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், வெளிநாடு வாழ் இந்தியா் நல அணி இணைச் செயலருமான டிஎன்வி எஸ். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை ஒன்றியச் செயலா்கள் ஆா்.சிவப்பிரகாசம், பி.எஸ்.சரவணன், சி.முத்துக்குமாா், த.நெப்போலியன், இ.டி.டி.செங்கண்ணன், மா.ரத்தினவேல், கோ.சந்திரமோகன், ஆா்.வேடம்மாள், செளந்தரராசு, நகரச் செயலா்கள் ஜெயச்சந்திரன், பி.மோகன், கு.கெளதமன், இ.மோகன், முல்லை ரவி, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கலைவாணி ஆகியோா் செய்திருந்தனா். இந்த விழாவில் சுமாா் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சென்னகிருஷ்ணன், சித்தாா்த்தன், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.வாசுதேவன், லட்சுமணன், எஸ்.தேவேந்திரன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT