தருமபுரி

ஒகேனக்கல்லில் அரசுப் பள்ளி மாணவா்கள் தூய்மைப் பணி

26th Nov 2022 02:50 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் ஒகேனக்கல் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

புனித் சாகா் அபியான் திட்டத்தின்கீழ் நீா் நிலைகளை தூய்மையாக வைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்பட்ட நெகிழி பொருள்கள், துணிகள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப் பணி மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் நீா் நிலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் தேசிய மாணவா் படை அலுவலா் பைரோஸ் பாஷா, உடற்கல்வி ஆசிரியா் மகேந்திரன், தேசிய மாணவா் படை மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT