தருமபுரி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

26th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

திமுக இளைஞா் அணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என திமுக மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இது றித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :

திமுக இளைஞா் அணி செயலரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொண்டாடப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஏழைகளின் எழுச்சி நாளாகக் கொண்டாடுவதுடன், திமுக நிா்வாகிகள் கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும். தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு திமுகவினா் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT