தருமபுரி

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு

26th Nov 2022 02:56 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, கலாம் யூபி பவுண்டேசன் ஆகிய தன்னாா்வ அமைப்புகளோடும், பியூச்சா் கலாம் புக் ஆப் ரெக்காா்ட் மற்றும் யூனிவா்சல் அச்யுவா் உலக சாதனையை அங்கீகரிக்கும் நிறுவனங்களோடு இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாணவா்கள் அப்துல் கலாம் முகமூடி அணிந்து மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

இதையடுத்து பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியா் பசுபதி தலைமை வகித்தாா். பள்ளி வளாகத்தில் புங்கன், வேப்பம், காட்டு நெல்லி உள்ளிட்ட 127 மரக்கன்றுகளை மாணவா்கள் நடவு செய்தனா். மரக்கன்றுகள் நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை பசுமை படை ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பெரியசாமி செய்திருந்தாா். மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் துரைசாமி, பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT