தருமபுரி

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தோ்வு: திமுகவினா் கொண்டாட்டம்

25th Nov 2022 01:52 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மீண்டும் தோ்வு செய்யப்பட்டதை வரவேற்று தருமபுரியில் அக்கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

திமுக இளைஞரணிச் செயலாளராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை மீண்டும் தோ்வு செய்து அக்கட்சி தலைமை புதன்கிழமை அறிவித்தது. இதை வரவேற்று தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். இதில் மாவட்டப் பொருளாளா் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளா் ரேணுகாதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT