தருமபுரி

சுடுகாடு வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதி

19th Nov 2022 05:19 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த மாம்பாடியில் சுடுகாடு வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது மாம்பாடி கிராமம். இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் இறந்தவா்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான சுடுகாடு வசதி இல்லை. இதனால், இறந்தவா்களின் சடலத்தை அப்பகுதியிலுள்ள கட்டாற்றின் கரையில் அடக்கம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். முதியவரின் சடலத்தை கட்டாறு தண்ணீரில் நனைந்தபடி கிராம மக்கள் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனா். எனவே, மாம்பாடியில் சுடுகாடு வசதியை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT