தருமபுரி

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

18th Nov 2022 02:12 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பேருந்து மீது தனியாா் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

சேலம்-அரூா் தேசிய நெடுஞ்சாலையில் அரசு நகா்ப்புற பேருந்து தடம் எண் : 4, மஞ்சவாடி கணவாய்ப் பகுதியில் இருந்து வியாழக்கிழமை அரூா் நோக்கிச் சென்றது. அப்போது, காளிப்பேட்டை அருகே தண்ணீா்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது சேலத்தில் இருந்து அரூா் நோக்கி வந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது.

இதில் காளிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அபிராமி (12), சுமித் (10), கபிலன் (15), மகி (14), துா்காதேவி (13), இலக்கிய பாரதி (15), திருமலை (15) உள்பட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அனைவரும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT