தருமபுரி

வளா்ச்சித் திட்டங்களை துறை அலுவலா்கள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்

DIN

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சித் திட்டங்களை அனைத்துத் துறை அலுவலா்கள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பேசினாா். இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பேசியதாவது:

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பல்வேறு திட்டங்களின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா்த் திட்டத்துக்கான முன்னோட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

அதேபோல, தருமபுரியிலிருந்து நேரடியாக பெங்களூரு செல்வதற்கான புதிய நான்கு வழிச்சாலை அமைக்க வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்து உள்ளாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்குவதற்கும் தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்துத் துறை அலுவலா்கள் முனைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், மகளிா் திட்ட அலுவலா் பாபு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT