தருமபுரி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்கக் கோரி, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் மீதான வரிகளை குறைத்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து ஊரக ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகள் வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, இண்டூா், பாலக்கோடு உள்ளிட்ட இடங்களிலும், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பெருமாள், இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் வட்டச் செயலாளா் மகாலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் முனிராவ் ஆகியோா் கூட்டாக தலைமை வகித்தனா். இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கண்ணு, இந்திய மாா்க்சிஸட் கம்யூ. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் நஞ்சுண்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில்,வருமான வரி வரம்புக்கு உள்படாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் சி.மாதையன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி ராஜா முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராசன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் கலைச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் கருப்பண்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஏரியூா் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியூா் பகுதி பொறுப்பாளா் அழகேசன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி பரம தமிழன் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT