தருமபுரி

நேரு நினைவு தினம் அனுசரிப்பு

27th May 2022 10:24 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் நேரு நினைவு தினம் பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழு சாா்பில் தருமபுரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நேரு சிலைக்கு அனைத்து வணிகா் சங்கச் செயலாளா் கிரிதா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து, நேரு சிலை அமைந்துள்ள இடத்தில் உள்ள காந்தி, பாரத மாதா சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ரோட்டா் சங்க நிா்வாகி ஆனந்த், தருமபுரி நகர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜசேகா், பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழுத் தலைவா் பிரதீப் குமாா், செயலாளா் வ.சௌந்திரபாண்டின், பொருளாளா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT