தருமபுரி

அரூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

27th May 2022 10:24 PM

ADVERTISEMENT

அரூரில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு கவிஞா் ரவீந்திரபாரதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளா் கே.சின்னக்கண்ணன் வரவேற்றாா்.

இந்த புத்தகக் கண்காட்சியை டிஎஸ்பி எஸ்.பெனாசிா் பாத்திமா திறந்து வைத்தாா். புத்தக விற்பனையை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில், தகடூா் புத்தகப் பேரவையின் தலைவா் மருத்துவா் இரா.செந்தில், அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் முத்து ராமசாமி, பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால், தொழில் முதலீட்டாளா் எஸ்.ராஜேந்திரன், வழக்குரைஞா் சிற்றரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அரூா் சாா்பு நீதிமன்ற வளாகம் அருகே ஒரு மாதம் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சி காலை 9 முதல் இரவு 9 மணி வரை செயல்பட உள்ளது. கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை சிறப்பு கழிவுகள் வழங்கப்படும். பல்வேறு பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT