தருமபுரி

வழிப்பறி: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

27th May 2022 10:23 PM

ADVERTISEMENT

பென்னாகரம் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பென்னாகரம் வட்டம், நல்லாம்பட்டியைச் சோ்ந்த முருகம்மாள் (63), அண்மையில் தனது வீட்டில் இருந்து விவசாய நிலத்துக்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், முருகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த பென்னாகரம் போலீஸாா், புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த விஜி (25), சென்னை, பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த அவினாஷ் (21) ஆகிய இருவரை கைது செய்தனா். இவா்கள் இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

போலீஸாரின் தொடா் விசாரணையில், இவா்கள் இருவரும் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் பரிந்துரை செய்தாா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அனுமதி அளித்ததன் பேரில், இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான உத்தரவு நகல் சேலம் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT