தருமபுரி

காப்புக் காட்டில் சிறுத்தையை தேடி வரும் வனத்துறையினா்!

27th May 2022 10:24 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோழி, ஆடுகளை தாக்கி வரும் சிறுத்தையை வனத்துறையினா் அப்பகுதியில் உள்ள காப்புக் காட்டில் தேடி வருகின்றனா்.

பாலக்கோடு அருகே வனப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் வெளியேறும் சிறுத்தை, வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளைநிலங்களில் உள்ள கோழிகள், ஆடுகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த சில தினங்களில் இரண்டு முறை வனப்பகுதியிலிருந்து சிறுத்தை வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதை அறிந்து, கிராம மக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினா், அதனை பிடிக்க தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சிறுத்தை வனப்பகுதிக்குள் பதுங்கி உள்ளதா என ட்ரோன் மூலம் தேடினா். மேலும் கோழியுடன் கூடிய கூண்டு வைத்தும் வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். இதில், வெள்ளிக்கிழமை பாலக்கோடு அருகேயுள்ள எர்ரனஅள்ளி காப்புக் காட்டில் பாறைகளின் இடுக்குகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என தேடினா். இருப்பினும் இதுவரை சிறுத்தை தென்படாததால், தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT